தாஷ்கண்ட் : இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்து குடித்து உக்ரைனில் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் டில்லி அருகே உள்ள நொய்டாவை மையமாக வைத்து டாக்1-மேக்ஸ் (குராமேக்ஸ் ) என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இருமல் மருந்து மற்றும் மாத்திரைகள் உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக இந்திய அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளோம். மேலும் இந்த மாத்திரை மருந்துகளை எங்கள் நாட்டில் தடை செய்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற சமீபத்தில் காம்பியா நாட்டில் இந்தியா தரப்பில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்து 72 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement