திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது, முகக்கவசம் அணிவது அவரவர் உயிரை அவரவர் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கை என்று கூறினார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்துள்ளார். இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை […]
