வாஷிங்டன்,-அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் உட்பட மூன்று இந்தியர்கள், பனி உறைந்திருந்த ஏரியில் நடந்து சென்றபோது, பனிக்கட்டி உடைந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக கடும் பனி சூறாவளி வீசுகிறது. இந்த சூறாவளியால், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அரிசோனா மாகாணம் சாண்ட்லெர் நகரில் வசித்த இந்திய வம்சாவளியைச்சேர்ந்த நாராயணா முதனா,49, கோகுல் மெடிசெட்டி,47, ஹரிதா முதனா ஆகிய மூவரும், அங்குள்ள வுட்ஸ் கேன்யான் ஏரியில் உறைந்திருந்த பனிப்பாறையில் நடந்து சென்றனர்.
திடீரென ஓரிடத்தில் பனிக்கட்டி உடைந்து, கால் நழுவி, தண்ணீரில் விழுந்து மூழ்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், மூவர் உடலையும் மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement