டெல்லி: ஒரேநாடு ஒரேதேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இதன் காரணமாக, மத்தியஅரசு அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் அதிகரித்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு ஓபிஎஸ் வழக்குகள் தொடுத்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி, சமர்ப்பித்த […]
