கடைசி நொடிகளில் வெற்றி கோல் அடித்த எம்பாப்பே! ரசிகர்கள் ஆர்ப்பரிப்பில் அதிர்ந்த மைதானம்


பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்ட்ராஸ்பர்க் அணியை வீழ்த்தியது.

தவறிழைத்த நெய்மர்

பாரிஸின் பார்க் டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பி.எஸ்.ஜி (பாரிஸ் செயின்ட் ஜேர்மைன்) மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக தொடங்கிய பி.எஸ்.ஜி அணி 14வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் கேப்டன் மார்குயின்ஹோஸ் அபாரமாக கோல் அடித்தார்.

ஆனால், அவர் 51வது நிமிடத்தில் சுயகோல் போட்டதால், ஸ்ட்ராஸ்பெர்க் அணிக்கு கோல் கிடைத்தது.

நெய்மர்/Neymar

@AFP

ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான நெய்மர், போட்டி விதியை மீறியதால் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது பி.எஸ்.ஜி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

எம்பாப்பே கோல் 

எனினும் மற்றொரு நட்சத்திர வீரர் எம்பாப்பே அணியை தாங்கிப் பிடித்தார்.

90 நிமிடங்கள் முடிந்தபோது 1-1 என போட்டி சமனில் இருந்தது. இதனால் 4 நிமிடங்கள் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அப்போது கிடைத்த பெனால்ட்டி சரியாக பயன்படுத்திக் கொண்ட எம்பாப்பே அசத்தலாக கோல் அடித்தார்.

அதுவே அந்த அணியின் வெற்றி கோல் ஆகவும் அமைந்தது. இதனால் பி.எஸ்.ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எம்பாப்பே/Mbappe

@LP/Olivier Lejeune

எம்பாப்பே/Mbappe

@ Profimedia

எம்பாப்பே/Mbappe

@beinsports.com



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.