புதுடெல்லி: சீனாவில் கரோனா ஒமிக்ரான் வகை புதிய தொற்று அதிகரித்து வருகிறது. அண்டை நாடான இந்தியாவிலும் கரோனா தொற்றுஅதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்து வரும் 40 நாட்களும் முக்கியமான நாட்களாக இருக்கும் என்றும், கரோனா தடுப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முன்பு கிழக்கு ஆசிய மண்டலத்தில் கரோனா அலை ஏற்பட்ட 30 முதல் 35 நாட்களில் இந்தியாவில் அதன் பாதிப்பு ஏற்பட்டு தீவிரமானதாக மாறியது. இந்தநிலையில் கடந்த 3 ஆண்டு களாக உள்ளது.
எனவே, நமது நாட்டுக்கு அடுத்து வரும் 40 நாட்களும் மிகவும் முக்கியமானவை. எனவேநாடு முழுவதும் கரோனா தடுப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. கரோனா புதிய வகை நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக உள்ளது என்றாலும், கரோனா புதிய அலை உருவா னாலும், உயிரிழப்பு மற்றும் மருத் துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது மிகக் குறை வாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி உத்தரவு: இந்நிலையில் கரோனா தொற்றைத் தடுப்பதற்கு தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு பிரதமர் மோடி உத்தர விட்டுள்ளார்.
இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளை, மத்திய அமைச்சர் மாண்டவியா முடுக்கி விட்டுள்ளார். மாநில,யூனியன் பிரதேச அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தி அங்குதேவையான தீவிர தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துதல் அறை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கரோனா தடுப்பு மருந்துகள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,468-ஆக உயர்ந்துள்ளது.
39 வெளிநாட்டு பயணிகள்: கடந்த 3 நாட்களில் இந்திய விமான நிலையங்களில் பரிசோதனை செய்ததில் 39 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து வெளிநாட்டில் இருந்து பயணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் சேகரித்து வருகிறது.
4-வது டோஸ் தேவையில்லை: புனேவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி மையமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச் (ஐஐஎஸ்இஆர்) மையத்தின் சத்யஜித் ராத் கூறியதாவது: சீனாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் காரணாக கரோனா அதிகமாக பரவி இருக்கலாம். அதைப் போல் இங்கும் நடக்கும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்தியாவில் ஏற்கெனவே பலர் 3 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே, 4-வது டோஸ் தடுப்பூசி அவர்களுக்குத் தேவையில்லை. ஆனால், அதே நேரத்தில் தீவிரமான முன்னெச்சரிக்கையும், முகக்கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகளும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறும்போது, “விரைவில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். இதில் ஐஎம்ஏ நிர்வாகிகள் கலந்துகொண்டு நாட்டில் 4-வது டோஸ் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவோம்’’ என்று தெரிவித்தார்.