காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில்…தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காதல் தம்பதியினர் திருமணமான இரண்டே மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தம்பதியினர் தற்கொலை

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஏ எம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் தங்கமுனியசாமியும்(26), துவரந்தை கிராமத்தை சேர்ந்த சீதாசெல்வி(24) என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில்…தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு | Thoothukudi Love Marriage Couple Took Bad Decision

தங்கமுனியசாமி தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்த நிலையில், திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து நேற்று காதல் தம்பதியினரின் வீட்டு கதவு வழக்கம் போல் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்ததில் கணவன் மனைவி என இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து தூத்துக்குடி சப்-கலெக்டர் விசாரணை செய்து வருகிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில்…தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு | Thoothukudi Love Marriage Couple Took Bad Decision

வீட்டின் பெற்றோர்களின் எதிர்ப்பை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த மரணம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நடந்ததா? அல்லது குடும்பத்தினரின் ஏதேனும் அழுத்தமாக? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.