கிரேட்டாவை ஆபாசமாக குறிப்பிட்ட ஆண்ட்ரூ; சமூக வலைதளத்தில் வார்த்தைப்போர்!

காலநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளித்துறப்பு போராட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர், கிரேட்டா தன்பெர்க். எதிர்காலத்தில் வரும் தலைமுறையினருக்கு எத்தகைய சூழலைத் தர உள்ளீர்கள் என அதிகாரத்தின் மீது தன்னுடைய கேள்விக் கணைகளைத் தொடுத்தவர்.

இப்போது இவரின் பதிவுகள் மீண்டும் கவனம் பெறத் தொடங்கி உள்ளன. அதற்கு காரணம், பிரிட்டிஷ் – அமெரிக்கரான ஆண்ட்ரூ டேட் என்ற முன்னாள் கிக் பாக்ஸர்.

ஆண்ட்ரூ பற்றி சொல்ல வேண்டுமென்றால், 2017- ம் ஆண்டில் `Me Too’ அதிக கவனம் பெறத் தொடங்கிய சமயத்தில், `பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்குப் பெண்களும் சில பொறுப்பை ஏற்க வேண்டும்’ என ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தி பலரின் எதிர்ப்புகளைப் பெற்றவர். இவரின் தொடர் ஆணாதிக்கப் பதிவுகளால் ட்விட்டர் பயன்படுத்த இவருக்குத் தடை விதிக்கப்பட்டது. 

எலான் மஸ்க் ட்விட்டரை தன்வசமாக்கிய பின், இவர் மீண்டும் ட்விட்டரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அப்படி ட்விட்டருக்கு வந்தவர், கிரேட்டாவை டேக் செய்து, “ஹலோ கிரேட்டா தன்பெர்க், என்னிடம் 33 கார்கள் உள்ளன. என்னுடைய Bugatti w16 8.0L, என்னுடைய இரண்டு Ferrari 6.5Lv12s மாடல், இது வெறும் ஆரம்பம். தயவுகூர்ந்து உங்களின் இ- மெயில் அட்ரெஸ் கொடுங்கள்; அப்போது தான் என்னிடம் உள்ள காரின் முழு விவரங்களையும் அனுப்ப முடியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த கிரேட்டா, “ஆம், ப்ளீஸ் எனக்கு அறிவூட்டுங்கள். -க்கு மெயில் செய்யுங்கள்’’ என்று நையாண்டி செய்துள்ளார். 

கிரேட்டாவின் இந்த பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத ஆண்ட்ரூ, “இ – மெயில் அட்ரஸை உறுதிசெய்ததற்கு நன்றி எனக் கூறி தகாத முறையில் அந்தரங்க உறுப்பைக் கேலி செய்து, மிகவும் அவதூறாகப் பேசி,  சிகரெட் புகைக்கும் வீடியோ ஒன்றை இணைத்து அனுப்பியுள்ளார். இவரின் இந்த ஆபாசப் பதிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

தோல்வியிலும், விரக்தியின் உச்சத்திலும் இருக்கும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களின் கையில் ஆயுதம், உருவகேலியையும் பெண்களின் உடலை விமர்சிப்பதும்தான்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.