கேசினோ ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: உயிருக்காக மாடியில் இருந்து குதிக்கும் மக்கள்: வீடியோ


கம்போடியாவில் உள்ள கேசினோ ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேசினோவில் தீ விபத்து

மேற்கு கம்போடியாவின் பாய்பெட் நகரில் உள்ள கிராண்ட் டைமண்ட் சிட்டி கேசினோவில் புதன்கிழமை நள்ளிரவில்  பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தியதாக தேசிய காவல்துறையின் பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 மணிக்குப் பிறகு கேசினோ ஹோட்டலில் பற்றிய தீ அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 10 பேர் வரை இதுவரை உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐம்பத்து மூன்று பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் எட்டு பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் Sa Kaeo மாகாணத்தின் ஆளுநர் Parnya Phothisat தெரிவித்துள்ள தகவலில், தீ விபத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும், 32 தாய்லாந்து நாட்டினர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேசினோ ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: உயிருக்காக மாடியில் இருந்து குதிக்கும் மக்கள்: வீடியோ | Fire At Casino And Hotel In Poipet Cambodia

சமூக ஊடகங்கள் தீ விபத்து தொடர்பாக வெளிவந்துள்ள வீடியோ காட்சிகளில், விருந்தினர்கள் ஜன்னல்களுக்கு வெளியே தொங்குவதும், கட்டிடத்திற்குள் மக்கள் சிக்கியிருப்பதும் தெரியவருகிறது.

எரியும் கட்டிடத்தில் இருந்து பாதுகாப்புக்கு குதிக்க முயன்றதில் குறைந்தது இரண்டு பேர் இறந்ததாகவும், கிராண்ட் டயமண்ட் சிட்டி கேசினோவிற்கு பின்னால் இருக்கும் ஹாலிடே பேலஸ் ஹோட்டலில் பணிபுரியும் ஜான் சாகுன் தெரிவித்துள்ளார். 

உதவி கோரிய கம்போடிய அதிகாரிகள்

தீ விபத்து ஏற்பட்டுள்ள Poipet மேற்கு கம்போடியாவில் உள்ள Banteay Meanchey மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும், இது அதிக செல்வந்த தாய்லாந்து நகரமான Aranyaprathet க்கு எதிரே அமைந்துள்ளது.

கேசினோ ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: உயிருக்காக மாடியில் இருந்து குதிக்கும் மக்கள்: வீடியோ | Fire At Casino And Hotel In Poipet Cambodia

 இந்த இரண்டு நகரங்களும் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மையங்களாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கம்போடிய அதிகாரிகள் தாய்லாந்திடம் உதவி கோரியுள்ளனர், அதனடிப்படையில் தாய்லாந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 மீட்பு வேன்களை எல்லைக்கு அனுப்பியுள்ளது. 

கேசினோ ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: உயிருக்காக மாடியில் இருந்து குதிக்கும் மக்கள்: வீடியோ | Fire At Casino And Hotel In Poipet CambodiaAFP/Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.