திருமலை: ஏழுமலையான் குடிகொண்டிருக்கும் திருப்பதி கோவிலின் கர்ப்பகிர தங்க கோபுரத்தின் கோபுர தங்கக்கவசம் மாற்றியமைக்கப்பட உள்ளதால், சுமபார் 8 மாதங்கள் ஏழுமலையான், வேறுஇடத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதுதொடர்பாக தேவஸ்தான் ஆலோசித்து வருகிறது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படுகிறார். திருமாலின் அற்புதமான திருத்தலம். நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோவில் […]
