சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலி – 2 யானைகள் உயிரிழப்பு

சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இரண்டு காட்டு யானைககள் இறந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

யானைகள் இறந்தமை தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்காமல்  ,பெக்கோ இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இறந்த யானைகளை இரகசியமாக புதைத்தhகவும் பொலிஸ் பொலிஸ் விசாரணையில் தெரியந்துள்ளது.

திறப்பனை பொலிஸ் பிரிவின் ஊட்டிமடுவ, ஞானிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த 19ஆம் திகதி தனது விவசாய நிலத்துக்கு சென்ற போது ,இரண்டு காட்டு யானைகள் மின்சார வேலிக்கு அருகில் உயிரிழந்துள்ளதையறிந்து பேக்கோ இயந்திரத்தை கொண்டு யானைகளை புதைத்துள்ளார். இதற்காக அவர் ரூ.79000.00 பணத்தை செலவிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.