சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சியின் மாநகர துணைத்தலைவர் மகேஷ் (32) கைது செய்யப்பட்டார். நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு வசிக்கும் முதியவர் சங்கருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோயில் இடங்களில் வாடகைக்கு குடியிருப்போரை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர் மகேஷ் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதானது உள்பட மகேஷ் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
