ஜேர்மன் உளவுத்துறை அதிகாரியே ரஷ்யாவுக்காக உளவு பார்த்த விடயம்: சிக்கியது எப்படி?


ஜேர்மன் உளவுத்துறை அதிகாரி ஒருவரே ரஷ்யாவுக்காக உளவு பார்த்த விடயம் ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலையே பயிரை மேய்ந்த கதை

ஜேர்மனியின் வெளிநாட்டு உளவு அமைப்பான BNDயிலுள்ள ஒரு துறையின் தலைவராக பணியாற்றியவர் Carsten L.

அவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக இம்மாதம் கைது செய்யப்பட்டார்.

சிக்கியது எப்படி?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தன் நாட்டின் பாதுகாப்புக்காக உழைக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த Carsten, தன் நாட்டுக்கே துரோகம் செய்துள்ளார்.

மேற்கத்திய நாடு ஒன்றின் உளவுத்துறை கொடுத்த இரகசிய தகவலின்பேரில்தான் Carsten சிக்கியுள்ளார்.

அந்த நட்பு நாட்டின் உளவுத்துறை, ரஷ்யா குறித்த முக்கிய தகவல் அடங்கிய ஆவணம் ஒன்று மாஸ்கோ வசம் இருப்பதை கண்டறிந்தததுடன், அது ஜேர்மன் உளவு அமைப்பான BNDயிலிருந்து வந்துள்ளதை அறிந்ததும், ஜேர்மனிக்கு இரகசியமாக தகவலளித்துள்ளது.

அதைத் தொடர்ந்துதான் Carsten கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஜேர்மன் உளவுத்துறை அதிகாரியே ரஷ்யாவுக்காக உளவு பார்த்த விடயம்: சிக்கியது எப்படி? | How Germany Caught A Russian Spy Suspect



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.