பிரபல தொகுப்பாளினியான டிடி எனும் திவ்யதர்ஷினி விஜய் டிவியின் வளர்ப்பு பிள்ளை என்றே சொல்லலாம். தனது சிறுவயதிலேயே இவர் சின்னத்திரையில் கால் பதித்துவிட்டார், 1999ம் ஆண்டு சிறுவயதிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதன் பின்னர் படிப்படியாக படங்கள் மற்றும் நாடகங்களில் நடிக்க தொடங்கி, தற்போது சிறந்த தொகுப்பாளினிக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவேற்பு கிடைத்தது. சில வருட இடைவெளிக்கு பின்னர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி பல உயரங்களை தொட்ட டிடி-யின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. இவர் தனது நீண்ட நாள் நண்பரும், உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணத்தை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சி டிடி-க்காக ஒரு தனி நிகழ்ச்சியை நடத்தியது. ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை வெகுநாள் நீடிக்கவில்லை, 2017ல் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, டிடி இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும், அதன்படி கேரள தொழிலதிபர் ஒருவரை மணக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் டான்ஸ் மாஸ்டர் சதீஷுடன், டிடி நெருக்கமாக பழகி வருவதாக சில வதந்திகள் வெளியான நிலையில், தற்போது இவரது இரண்டாம் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து டிடி தரப்பிலிருந்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாள் கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷுவா இமை போல் காக்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுதவிர விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் சில முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.