நிறைய பட்டாசு வாங்கி வெச்சுக்கோங்க – துணிவை பாராட்டி தள்ளிய நீரவ் ஷா

ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இருவரும் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை பெறவில்லைஇதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது.

இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சூழலில் இரண்டு படங்களிலிருந்தும் பாடல்களும், அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதற்கு அடுத்ததாக வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியனது.

வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த 24ஆம் நடந்தது. இதற்கிடையே துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் கேங்ஸ்டா என்ற பாடலும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் துணிவு படத்தின் ட்ரெய்லரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் துணிவு படத்தில் ஒளிப்பதிவாளரான நீர்வ ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போதுதான் பார்த்தேன். பட்டாசு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நிறைய பட்டாசு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

31ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகவிருக்கும் சூழலில் நீர்வ ஷா பார்த்தது துணிவு படத்தின் ட்ரெய்லரையா இல்லை துணிவு படத்தையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். எது எப்படியோ இந்தப் பொங்கல் நிச்சயம் துணிவு பொங்கலாகத்தான் இருக்கும் என ஏகே ரசிகர்கள் இப்போதிருந்தே தங்களது கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.