பலூன்களுடன் அந்தரத்தில் பறந்தபடி போட்டோஷூட் : சூப்பராக ட்ரிக் செய்த அனு சுலாஷ்

மெட்டர்னிட்டி போட்டோஷூட் என்ற பெயரில் கர்ப்ப காலத்தில் விதவிதமாக போட்டோஷூட் எடுப்பது இன்று சகஜமாகிவிட்டது. அதிலும், பிரபலங்கள் பலரும் இதை ஒரு ட்ரெண்டாகவே மாற்றிவிட்டனர். அந்த வகையில் 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வரும் அனு சுலாஷூம் ஒரு ரிஸ்க்கான, வித்தியாசமான போட்டோஷூட்டை எடுத்துள்ளார். அதில், பலூன்களுடன் இணைக்கப்பட்ட தொட்டில் ஒன்று அந்தரத்தில் பறந்து கொண்டிருக்க, அனு சுலாஷும் அவரது கணவரும் அதில் ஏறி அமர்ந்து போஸ் கொடுத்துள்ளனர். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஒருவகையில் ரிஸ்க்கான போட்டோஷூட் என்பதால், கர்ப்பமான வயிறுடன் இதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம் என ரசிகர்கள் அட்வைஸ் செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால், உண்மையில் அந்த தொட்டிலானது காற்று அடைக்கப்பட்ட பலூன்களால் பறக்கவில்லை, ஒரு கிரேனுடன் இணைக்கப்பட்டு அதன் சப்போர்ட்டில் தான் அந்தரத்தில் தொங்குகிறது. மேலும், மற்றொரு நபரை வைத்து பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுவும் அதில் ஏறி அமர்ந்திருக்கிறார். எனவே,அந்த போட்டோஷூட் முற்றிலும் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது தான். இதற்கான மேக்கிங் வீடியோவை அனுசுலாஷ் வெளியிட, 'சூப்பரான கிரியேட்டிவிட்டி' என பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.