பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான்: அகிலேஷ் யாதவ்

புதுடெல்லி: கொள்கை அடிப்படையில் பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 3ம் தேதி மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த யாத்திரை டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்குள் செல்ல இருக்கிறது. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை உத்தரப் பிரதேசத்திற்குள் வரும்போது அதில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதா என அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அகிலேஷ் யாதவ், ”தொலைபேசி மூலமாக உங்களுக்கு அழைப்பு வந்திருந்தால் அதை எனக்கு அனுப்புங்கள். எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. எங்கள் கட்சியின் கொள்கை வேறுபட்டது. ஆனால், பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.