மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 24 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணிகள் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement