புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவித்ததை கொடுக்க உள்ளோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும். மேலும், புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.34-ல் இருந்து ரூ.37-ஆக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.
