பொலிஸாரின் விசேட அறிவிப்பு



போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை பொலிஸாரால் 2018ஆம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைத் தடுக்க 180,000 சாதனங்களைக் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது அவை தீர்ந்துவிட்டன. இப்போது நாங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை மட்டுமே கைது செய்கிறோம்.

எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்ய 160 மில்லியன் ரூபாவை பொலிஸாருக்கு தேசிய வீதி பாதுகாப்பு சபை வழங்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.