பிரதான பொலிஸ் பரிசோதகராக ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த
பீ.கே.எட்டியாராட்சி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், வெற்றிடத்திற்கு அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக இவர் (28) புதன்கிழமை சமய வழிபாடுகளை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
M M Fathima Nasriya