புதுச்சேரி : புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையம் சார்பில் முக எலும்பு சீரமைப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அசோக்குமார் முக எலும்பு சீரமைப்பு குறித்து பேசினார். சென்னை எம்.ஜி.எம்., ெஹல்த் கேர் மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஹரிச்சந்திரன் குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை குறித்து பேசினார்.
கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் உட்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement