
ரஜினியின் 'முள்ளும் மலரும்' பட டைட்டிலில் நடித்த பிரஜன், ஆனந்த கண்ணன்!
தமிழ் சின்னத்திரையில் இன்று மக்களுக்கு பிடித்தமான பிரபலங்கள் சிலர் மியூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் அறிமுகமாகினர். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் மெமரிகளில் கலந்துள்ள முன்னாள் வீஜேக்கள் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தனர். அப்போது, தங்களுடன் இணைந்து பணிபுரிந்து, வாழ்ந்து மறைந்த ஆனந்த கண்ணன் பற்றி தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வீஜே லிங்கேஷ், ஆனந்த கண்ணன் கோவிட் சமயத்தின் போது தனக்கு பகிர்ந்திருந்த வாய்ஸ் நோட்டை போட்டு காண்பித்தார். அதில் ஆனந்த கண்ணன் மனிதம் குறித்து எதார்த்தமாக சொல்லியிருந்த கருத்துகள் இருந்தது. இதைகேட்டு அங்கிருந்த ஆனந்த கண்ணனின் நண்பர்கள் அனைவரும் கண்கலங்கினர்.
அதன்பின் பேசிய பிரஜன், 'நானும் ஆனந்த கண்ணனும் முள்ளும் மலரும் என்ற ரஜினி சார் படத்தின் டைட்டிலில் படம் ஒன்று நடித்திருந்தோம். 85% படம் முடிந்திருந்த நிலையில் சில காரணங்களால் படம் நின்றுவிட்டது. ஆனந்த கண்ணனை அதுமிகவும் பாதித்தது. அந்த படத்தை மீண்டும் ஆரம்பித்து முடிக்க வேண்டும் என மிகவும் விரும்பினான். அந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்வது தான் ஆனந்த கண்ணனுக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக நானும் என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்' என்று அதில் கூறியிருந்தார்.
அந்த நேர்காணலில் முன்னாள் வீஜேக்களான பிரஜன், லிங்கேஷ், காஜல் பசுபதி, நிஷா, ஹேமா, சந்தியா, முகமது அசீம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.