புனே: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு அபாந்தவனாக இருந்து பல கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றியது. பின்னர் தொற்று பரவல் குறைந்ததும், அந்நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொதுமக்கள் போடுவதற்கு முன்வராததால், அந்நிறுவனம் தயாரித்த சுமார் 10கோடி டோஸ் தடுப்பூசிகள் காலாவதியாகி வீணானது. […]
