“ரெட் விங்ஸி”ன் இலங்கைக்கான விமான சேவை ஆரம்பம்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான விமான வேவையை ‘ரெட் விங்ஸ்’ ரஷ்ய விமான சேவை நிறுவனம் இன்று (29) ஆரம்பித்துள்ளது.

இதன் முதலாவது விமானம் 398 பயணிகளுடன் மத்தள சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 9.48 மணியளவல் தரையிறங்கியது.

வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன..

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் விமான சேவைகளை மேற்கொள்ளும் மூன்றாவது ரஷ்ய விமான சேவை நிறுவனம் இதுவாகும்.

இதேவேளை, மத்தளவிமான நிலையத்திற்குமிடையிலான வாராந்த விமான சேவகளை ரெட் விங்ஸ்’ விமான சேவை நிறுவனம் அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.