சென்னை: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். 58 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
