கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலந்தாய்வு மூலம் 3,530 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 1,159 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. இதையடுத்து, வரும் ஜனவரி 6ம் தேதி வேளாண் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்குகிறது.
