10ம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 10ம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உரிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் டூ படிக்காமல் டிப்ளமோ முடித்தவர்கள், 3 ஆண்டு சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி கோவை மாணவி மனுத்தாக்கல் செய்திருந்தார். 12ம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டபடிப்புக்கு தகுதியானவர்கள் என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.