அனாதையான குழந்தைகள்! வெளிநாட்டில் ஆறு உறைந்ததால் இறந்த இந்திய தம்பதி… புதிய கண்ணீர் தகவல்


அமெரிக்காவில் இந்திய தம்பதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மூவர் பலி

அமெரிக்காவை கடும் பனி புரட்டி போட்டுள்ளது, பல நீர்நிலைகள் பனியால் உறைந்து போயுள்ளன.
இந்த நிலையில் அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய தம்பதியர், நாராயண முத்தனா (49), ஹரிதாவுக்கு, 12 மற்றும் 7 வயதில் உள்ள தங்கள் இரு செல்ல மகள்களுடன் இன்ப சுற்றுலா சென்றனர்.

அப்போது உறைந்து போன ஏரியைப் பார்த்ததும், நாராயண முத்தனா, ஹரிதா, அவர்களது நண்பர் கோகுல் சேத்தி (47) ஆகியோர் அதில் நடந்தபடி புகைப்படம் எடுத்தனர். அப்போது மைனஸ் 30 டிகிரி வெப்ப நிலை கொண்ட தண்ணீரில் தவறி விழுந்ததில் மூவரும் இறந்தனர்.

அனாதையான குழந்தைகள்! வெளிநாட்டில் ஆறு உறைந்ததால் இறந்த இந்திய தம்பதி... புதிய கண்ணீர் தகவல் | Usa Indian Couple Died Lake Family

file picture/the hindu

அனாதையான குழந்தைகள்

இதையடுத்து ஒரே நாளில் நாராயண முத்தனா, ஹரிதா தம்பதியரின் செல்ல மகள்கள், தங்கள் அன்புப்பெற்றோரை இழந்து அனாதையாகி நிர்க்கதியாய் நிற்கிறார்கள்.

இந்த சூழலில் அந்தக் குழந்தைகளை அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான கிஷோர் பிட்டாலா தனது பாதுகாப்பில் பெற்று, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தாத்தா வேதனை

அந்தக் குழந்தைகளின் தாத்தா, பாட்டி அதாவது நாராயண முத்தனாவின் பெற்றோர் வெங்கட சுப்பாராவும், வெங்கட ரத்னமும்தான் இனி அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். இவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பாலப்பற்று கிராமத்தில் வாழ்கிறார்கள்.

அங்கே பனிப்புயல் வீசிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே, எப்படி இருக்கிறாய் என்று கடந்த வாரம்தான் எனது மகன் நாராயண முத்தனாவை செல்போனில் அழைத்துப்பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவா என வேதனையுடன் பேசியுள்ளார் வெங்கட சுப்பாராவ்.

அனாதையான குழந்தைகள்! வெளிநாட்டில் ஆறு உறைந்ததால் இறந்த இந்திய தம்பதி... புதிய கண்ணீர் தகவல் | Usa Indian Couple Died Lake Family

gulte



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.