ஆகம விதியை மீறும் அண்ணாமலை – சேகர்பாபு தடலாடி

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (டிச. 29) நடைபெற்றது. மாநகராட்சி,குடிநீர் வழங்கல் வாரியம், காவல்துறை, தீயணைப்பு துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”ஏகாதேசி பெருவிழா நடைபெறுவதையோட்டி முறையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. 

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான வசதி, மருத்துவ முகாம்கள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரமபத வாசல் திறக்கும் நேரத்தில்  வாசலுக்கு அருகே அருகே 500 காவல் துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை  பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலும் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மூன்றாவது கட்டமாக மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை அடுத்த 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மொத்தமாக 1500  காவலர்கள் மூன்று சுற்றுகளாக  பாதுகாப்பணியில் ஈடுபடுபவர்கள்.

ஏகாதசி தினத்தன்று தீயணைப்புத்துறையினர் வாகனங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பக்தர்கள் அனைவரும் காவல் துறைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும்” என அமைச்சர் வேண்டுகோளும் வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,”ஏகாதேசி தினமன்று 150 தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து சுத்தப்படுத்தும் வேலையில் இருப்பார்கள். அன்று வரக்கூடிய பக்தர்களுக்கு கோவில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகம விதி என தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், அண்ணாமலை ஆகம விதியை மீறி செயல்படுகிறார்.

கோவில்களில் ஜாதி மத வேறுபாடு இன்றி அனைவரையும் சமமாக பார்க்கப்படும். ஒருவேளை ஜாதிகள் பார்ப்பதாக குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.