இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் Rishabh Pant படுகாயம்

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் Rishabh Pant இன்று (30) காலை தில்லியில் இருந்து காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் விபத்துக்குளள்ளானார்.

காரை அவரே ஓட்டி சென்றார். தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து  வீதி தடுப்பில் மோதியது. 

இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. வீதி  தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார்.

கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்தது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்ததும் ஸ்தலத்திற்கு வநத பொலிசார் ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.