ஒரேநாளில் 120 ஏவுகணைகளை தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்; வேகம் காட்டும் ரஷ்யா .!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்ததது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்த 10 மாதங்களாக நீண்டு வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் தயங்காது என ரஷ்ய அதிபர் புதின் கடந்த டிசம்பர் 3ம் தேதி தெரிவித்தார். இந்தநிலையில் ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்க, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் ஆற்றல் மையங்கள் மற்றும் நீர் வளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அதை சமாளிக்க ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதையடுத்து 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளது.

அதேபோல் உக்ரைனில் அணு ஆயுதத் தாக்குதலை ரஷ்யா நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா அதன் தாக்குதலில் பின்தங்கிய நிலையில், ரஷ்யா ஒரு திருப்புமுனையை அடைய அதன் அணு ஆயுதங்களை நாடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக நேட்டோ துணை பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

பழனியில் கஞ்சா விற்ற நபர் கைது!

அதேபோல் நேற்று ஒரே நாளில் 120 ஏவுகணைகளை கொண்டு உக்ரனை ரஷ்யா தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் விமானப்படை கூறும்போது, ‘‘உக்ரைனின் தலைநகரம், கிழக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா 120 ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளது. உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு குறிவைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது’’ என தெரிவித்துள்ளது.

சீனாவில் என்ன தான் நடக்கிறது? 8ஆம் தேதி முதல்.. விஷப் பரீட்சை!

இந்தநிலையில் நேற்று இரவும் ஆற்றல் மையங்களில் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் ரஷ்யா அனுப்பிய 16 ட்ரோன்களை அழித்து விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் விமானப்படை கூறும்போது, ‘‘ ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் ட்ரோன்கள் மூலம் உக்ரைனில் தென் கிழக்கு மற்றும் வடபகுதியில் இருக்கும் ஆற்றல் மையங்களில் நேற்று நள்ளிரவு ரஷ்யா தாக்குதல் நடத்தியது. அதேபோல் தலைநகர் கீவ்விலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அனுப்பிய 16 ட்ரோன்களையும் அழித்துவிட்டோம்’’ என்று கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.