ஓபிஎஸ்க்கு திடீர் அங்கீகாரம்… அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்- இரட்டை தலைமைக்கு ஓகே!

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான போட்டியில்

,

ஆகியோர் முட்டிக் கொண்டு இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதாக கூறி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கடந்த ஜூலை மாதம் கூட்டினர்.

அதில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது செல்லாது என்று நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. அதன்பிறகு இடைக்கால பொதுச் செயலாளர் பதவிக்கான கால வரம்பும் முடிவுக்கு வந்தது.

தற்போதைய சூழலில் ஒற்றை தலைமைக்கான நாற்காலியில் அதிகாரப்பூர்வமாக யாரும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் தங்களின் பதவிகளை குறிப்பிட்டு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கைகள், கடிதங்களில் அரசியல் செய்து வருகின்றனர்.

ட்விஸ்ட் நம்பர் 1…

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியிருந்தார். அதில் எடப்பாடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனே பதில் கடிதம் எழுதிய அவர், ஒருங்கிணைப்பாளர் நான் தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மத்திய அரசு இப்படி சொல்வது சரியல்ல. இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம் என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

ட்விஸ்ட் நம்பர் 2…

அதிமுக சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் நவம்பர் 29ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனால் ஓபிஎஸ் மீண்டும் கடுப்பானார்.

ட்விஸ்ட் நம்பர் 3…

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதன்படி அதிமுகவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பில் ஒருபடி மேலே சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு பேரிடியாய் வந்திறங்கியது.

ட்விஸ்ட் நம்பர் 4…

RVM எனப்படும் ரிமோட் எலக்ட்ரானி ஓட்டிங் மெஷினின் செயல்பாட்டு மாதிரி நிகழ்வு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் வரும் ஜனவரி 16ஆம் தேதி நடக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியெனில் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி இன்னும் அப்படியே இருக்கிறதா? என்ற எண்ணத் தோன்றுகிறது. இதன்மூலம் ஓபிஎஸ் கை ஓங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.