கடந்த 27-ந்தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கட் பிரமின்படா பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் நந்தா ஜோஷி என்பவர் தனது மகள் ஆர்த்தி ஜோஷியுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இவர்கள் அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். இதையடுத்து மறுநாள் இவர் தனது மகளுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பிறகு நந்தா ஜோஷியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகள் ஆர்த்தி ஜோஷி அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதைத்தொடர்ந்து ஆர்த்தி ஜோஷி, போலீசில் காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வட மாநில சுற்றுலா பயணியை தேடி வருகின்றனர்.