கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு பதில் புற்றுநோய் பாதிப்பு என தகவல் அனுப்பிய மருத்துவமனை; பதறிய நோயாளிகள்!

ஏதோ ஒரு ஞாபகத்தில், ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மற்றொருவருக்கு மாற்றி அனுப்பி இருப்போம். `அய்யய்யோ தெரியாம அனுப்பிட்டேன்’ எனக் கூறி மெசேஜை டெலீட் செய்திருப்போம். இதுபோன்று டீச்சர் குரூப், ரிலேடிவ்ஸ் குரூப் என மெசேஜை மாற்றி அனுப்பி வசமாகச் சிக்கிய சம்பவங்களும் பலருக்கு நடந்திருக்கும்.

மெசேஜ்

ஆனால் ஒரு மருத்துவமனை நிர்வாகம், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு பதிலாக, `நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்’ என்று நோயாளிகளுக்கு தவறுதலாக மெசேஜ் அனுப்பி உள்ளது. 

இங்கிலாந்தின் டான்காஸ்டர் பகுதியில் உள்ள அஸ்கெர்ன் மருத்துவ நிலையத்தில் இருந்து, டிசம்பர் 23-ம் தேதி பெரும்பாலான நோயாளிகளுக்கு இத்தகைய ஒரு மெசேஜ் சென்றுள்ளது.

அதில் “நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். மிகவும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நன்மைகள் வழங்க உதவும், DS -1500 படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதைப் பார்த்த பல நோயாளிகள் அதிர்ந்து போயுள்ளனர். அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மற்றொரு மெசேஜ் வருகிறது. “தயவு கூர்ந்து மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். முன்பு வந்த மெசேஜ் தவறுதலாக அனுப்பப்பட்டது.

christmas

நீங்கள் படிக்க வேண்டிய மெசேஜ்: உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள். அவசர உதவிக்கு NHS 111 எண்ணை அழைக்கவும் அல்லது – க்கு மெயில் செய்யவும்’’ என்று குறிப்பிட்டு இருந்தது.  

மருத்துவமனை நிர்வாகம் மெசேஜை மாற்றி அனுப்பி நோயாளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.