சென்னை: மாநில தலைநகர் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு லண்டன், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து, ரூபாய் 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்காவினை அமைக்க உள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெயியிட்ட செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், கடம்பூர் கிராமத்தில் 137.65.0 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் […]
