சமூக வலைதளங்களில் உலகம் சுற்றிக்கொண்டிருக்கையில் செய்தி தளங்களும் அதற்குள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட தளங்களில் ஜீ தமிழ் நியூஸும் ஒன்று. சார்பில்லாத, சமரசமில்லாத செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஜீ தமிழ் நியூஸை செயலி வழியாகவும், சமூக வலைதள பக்கங்கள் வழியாகவும் மக்கள் விரும்பி பின் தொடர்ந்துவருகின்றனர். அதற்கேற்றவாறு பல வழிகளில் ஜீ தமிழ் நியூஸின் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
அந்தவகையில் ஷேர்சாட் நிறுவனத்தின் வழியாகவும் உள்ளூரிலிருந்து உலகம்வரை ஜீ தமிழ் நியூஸின் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக அடித்தட்டு வலியிலிருந்து அதிகாரவர்க்கத்தின் கோரமுகம், சினிமா, விளையாட்டு என மக்களுக்கான செய்தி தளமாக ஜீ தமிழ் நியூஸ் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஜீ தமிழ் நியூஸ் யூட்யூப் சேனலின் நெறியாளர்களும் பல நிகழ்ச்சிகளில் முன்னெடுத்த அறமான கேள்விகளும் மக்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி மக்களுக்கான எங்களின் குரலை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஷேர்சாட் நிறுவனம் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறது.
இந்தச் சூழலில் துரிதமாகவும் துல்லியமாகவும் இந்த வருடத்தில் பல செய்திகளை வழங்கும், வழங்கப்போகும் Zee தமிழ் நியூஸுக்கு இந்த வருடத்துக்கான Sharechat Partner என்ற விருதை ஷேர்சாட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதில், முதலிடத்தில் Zee தமிழ் News இடம்பெற்றுள்ளது. தினகரன் டெய்லி செய்தி நிறுவனமும், நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனமும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.