ஜெய் ஸ்ரீராம் கோஷத்தால் டென்ஷன்! மேடைக்கு செல்ல மறுத்த மம்தா-வந்தே பாரத் நிகழ்வில் சர்ச்சை

ஹவுரா – நியூ ஜல்பாய்குரி வரையான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தாயாரின் மறைவு காரணமாகத் திட்டமிட்டபடி மேற்கு வங்கம் செல்ல இயலாத காரணத்தினால் நாட்டின் ஏழாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்யை கானொளி மூலம் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நியூ ஜல்பைகுரிக்கு கொடியேற்றப்பட்ட இடத்திலிருந்து மேடைக்கு வர மறுத்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வருகையின் போது “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷங்கள் தொடர்ந்ததால் எரிச்சலடைந்த முதல்வர் மம்தா அங்கிருந்த மற்ற அரசு அதிகாரிகளுடன் மேடைக்கு அருகில் அமர்ந்தார். ரயில் நிலையத்தில் அழைக்கப்பட்ட கூட்டத்தின் ஒரு பகுதியினரின் உரத்த கோஷங்களால் மம்தா பானர்ஜி வருத்தமடைந்தார். அவரை சமாதானப்படுத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை, மேடைக்கு பதிலாக பார்வையாளர் நாற்காலியில் அமர முதல்வர் தேர்வு செய்தார்.
image
ரயிலைக் கொடியசைப்பதற்காகத் திரையில் பிரதமர் மோடி தோன்றியபோது, பானர்ஜி மீண்டும் அமைதி அடைந்ததாக தெரிகிறது. நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறினார். “இன்று உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சோகமான நாள். இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு. உங்கள் தாயை நேசிக்க கடவுள் உங்களுக்கு பலத்தையும், ஆசீர்வாதத்தையும் தருவாராக…உங்கள் அம்மாவின் சோகமான மறைவால் உங்களால் வரமுடியாமல் இங்கு வந்திருப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தயவு செய்து ஓய்வு எடுத்து பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பானர்ஜி கூறினார்.
image
இதுஒருபுறம் இருக்க மொழிப் பிரச்னை ஒன்றும் வந்தே பாரத் ரயில் சேவையை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது.
”சென்னை மற்றும் பெங்களூரு இடையே, ரயிலில் ஆங்கிலம் உள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் 2 புள்ளிகளுக்கு இடையே உள்ள ரயிலில் பங்களா இல்லை, ஆங்கிலம் இல்லை. ஆனால் உ.பி., பீகார் மொழி உள்ளது. எவ்வளவு தைரியம் வங்காளிகளை அவமதிப்பதா?” என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.1950 இல் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, ரயில்வே ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Left is Chennai Bangalore & right is Howrah New Jalpaiguri #VandeBharat. Between Chennai & Bengaluru, train has English. But in Train between 2 points in West Bengal, there is no Bangla, no English but language of UP, Bihar? How dare @AshwiniVaishnaw insult Bengalis? @RailwaySeva pic.twitter.com/Aa1lOxJ704
— Garga Chatterjee (@GargaC) December 29, 2022

“>

Left is Chennai Bangalore & right is Howrah New Jalpaiguri #VandeBharat

. Between Chennai & Bengaluru, train has English. But in Train between 2 points in West Bengal, there is no Bangla, no English but language of UP, Bihar? How dare @AshwiniVaishnaw insult Bengalis? @RailwaySeva pic.twitter.com/Aa1lOxJ704
— Garga Chatterjee (@GargaC) December 29, 2022

பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில், மால்டா டவுன், பர்சோய், கிஷான்கஞ்ச் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.6.5 கி.மீ. தூரப் பாதையில், தாக்கூர்புக்கூர், சாகர்பசார், பேஹாலா சௌராஷ்டிரா, பேஹாலாபசார், தரத்தாலா ஆகிய 6 ரயில் நிலையங்கள் இதில் இணையும். மேலும் , ரூ.335 கோடிக்கும் அதிகமான செலவில் சீரமைக்கப்படவுள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையப்பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
-அருணா ஆறுச்சாமி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.