தஞ்சை: திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது விவசாயிகள் புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். ரூ.100 கோடி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தப்பட்டது. தங்கள் பெயரில் வாங்கிய கடனை விரைந்து செலுத்தவும் வலியுறுத்தப்பட்டது.