நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் பாடசாலை வளாகங்களை துப்பரவு செய்வதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை அதிபர்களினால் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த வருடத்தில் இதுவரை 75,434 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
பல பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது