நீங்க எடுக்குற ஷார்ட் பிலிம் இப்படித்தான் இருக்கணும் – இயக்குனர் விக்னேஷ் சிவன்

சென்னை பெருநகர காவல்துறையினரின் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக போதை விழிப்புணர்வு அல்லது போதை தடுப்பு ஆகிய தலைப்புகளில் குறும்பட போட்டி நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை வடசென்னை இணை ஆணையாளர் அலுவலகத்தில், இணை கமிஷனர் ரம்யாபாரதி மற்றும் சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்

விக்னேஷ் சிவன் கூறியதாவது;

நானும் ரவுடிதான் திரைப்படம் பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்டது. அதில் ஹீரோ ஒருமுறை கூட மது அருந்துவது. புகைபிடிப்பது போன்ற ஒரு காட்சியை கூட நான் படமாக்கவில்லை.

என்னுடைய திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்று இதுவரை நான் காண்பித்ததில்லை,

மற்ற இயக்குனர்களும் அவரவர்களின் பாணியில் அதை செய்வார்கள் என்று நம்புகிறேன். இது போன்ற குறும்படங்களில் பங்கேற்று தான் இன்று இயக்குனராக பணியாற்றுவதற்கு தேவையான அனுபவம் எனக்கு கிடைத்தது . எனவே வளர்ந்து வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நானும் காவல் துறை குடும்பத்தை சேர்ந்தவன் தான். எலக்ட்ரானிக் மீடியா பாடத்தை தேர்வு செய்து படித்தேன். போதைப் பொருட்களினால் ஏற்படும் அபாயங்களையும் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் பல்வேறு திரைப்படம் வாயிலாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

போதைப்பொருள்களினால் பாதிப்பு அதிகமாக இருப்பதால்தான் சினிமாவின் மூலமாக அதன் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதுபோன்ற காட்சிகளை பயன்படுத்துகிகிரார்கள்.

போட்டியாளர்கள் எடுக்கும் குறும்படத்தின் வாயிலாக போதை பொருட்களை உபயோகிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுமேயானால் அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி.

சூர்யா படத்தில் இல்லை;

அதேபோன்று தானா சேர்ந்த கூட்டம் படத்தில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு காண்பிக்கப்படும் (புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்) என்ற விழிப்புணர்வு வாசகமே இடம்பெறவில்லை ஏனென்றால் அந்தப் படத்திலும் அது போன்ற எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை

இணை கமிஷனர் ரம்யாபாரதி கூறியதாவது;

போதை பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது.

திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறந்த குறும்படங்களை தேர்ந்தெடுப்பதோடு அவரின் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெரும் இளைஞர்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அவர் அளிக்கிறார்

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், சினிமா ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற ஒரு குறும்பட போட்டியை நடத்தலாம் என்று விக்னேஷ் சிவன் தான் முதலில் யோசனை கொடுத்தார் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.