பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் Russell Domingo இராஜினாமா செய்துள்ளார்.
இந்திய அணியுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் சுற்றுத் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்து.
இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
Russell Domingo உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவர் 2019 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது