பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது வரை 80 நாள் கடந்துள்ளது. மொத்தம் 21 போட்டியார்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். அதன்படி பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது, இதனால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வரத் தொடங்கி இருக்கின்றனர். அதன்படி முதலில் மைனா நந்தினி, ஷிவின் மற்றும் அமுதவாணனின் குடும்பத்தினர் வந்து செய்திருந்தனர்.
பின்னர் அடுத்ததாக நேற்று புதன்கிழமை மணிகண்டன், ரச்சிதா மற்றும் ஏடிகே ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இன்று முதலாவதாக கதிரவனின் வீட்டில் இருந்து அவரது தாயார் வந்திருந்தார். மேலும் அவருடன் சர்ப்ரைஸாக கதிரவனின் காதலியும் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். தனது காதலியை கண்ட கதிரவனின் கண்கலங்கத் தொடங்கினார். இதுகுறித்த காட்சிகள் இன்றைய முதலாவது பிக் பாஸ் தமிழ் பரோமோவில் இடம்பெற்று இருந்தது. அத்துடன் இந்த பரோமோ வீடியோ வைரலும் ஆகி வருகிறது .
#Day81 #Promo01 #NowStreaming on #disneyplushotstar #BiggBossTamil #KamalHaasan pic.twitter.com/iJM4EG9q13
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) December 29, 2022
இதனிடையே அடுத்ததாக வெளியான இரண்டாவது பரோமோவில் ஏடிகே, அமுதவாணன், அசீம், மணி ஆகியோர் பாட்டுப்பாடி ஷிவினை கலாய்த்தனர். மேலும் கதிரவனின் காதலி வந்த உடன், ஷிவினுக்கு முகம் வாடிப்போனதும் பரோமோ வீடியோவில் தெரிந்தது.
#Day81 #Promo02 #NowStreaming on #disneyplushotstar #BiggBossTamil #KamalHaasan pic.twitter.com/2yR4YBDCbZ
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) December 29, 2022
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது பரோமோவின் காட்சியின் படி, கதிரவன் தனது காதலியுடன் ஜாலியாக ரொமான்ஸ் செய்வதை காண முடிகிறது, மறுபுறம் இவர்களின் ரொமான்ஸை கண்டு ஷிவின் பெட்ரூமில் படுத்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார், பின்னர் சிறுது நேரம் கழித்து மனமுடைந்து போன ஷிவின் கண்ணீர்விட்டு அழும் காட்சிகள் இதில் இடம்பெற்று உள்ளன.
#Day81 #Promo03 #NowStreaming on #disneyplushotstar #BiggBossTamil #KamalHaasan pic.twitter.com/i432prWxOw
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) December 29, 2022