புதுக்கோட்டை: "எட்டுவழிச்சாலை திட்டத்தை புகுத்தப் போவதில்லை; ஆனால்…'' – இணை அமைச்சர் வி.கே.சிங்

வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பா.ஜ.கவில் சிவகங்கை லோக்சபா தொகுதி பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான், சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, திருமயம் அருகே வி.லெட்சுமிபுரம், ஓடைப்பட்டி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளைப் பார்வையிட்டு, அவற்றால், பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, இந்த பிரச்னைகள் எல்லாம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைகள் கட்டமைப்புப் பணிக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

மத்திய அமைச்சர் வி.கே.சிங்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சாவடி என அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச் சாவடிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் சிரமப்பட்டுவதாக தகவல்கள் கிடைத்தது. இதைத் தவிர்க்க நவீன கருவி பொருத்தப்பட்டு, வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் டிஜிட்டல் ஆக்கப்படும். மேலை நாடுகளில் உள்ளதைப் போன்று பாஸ்ட் டிராக் மூலம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறது. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். சாலைகள் மேம்பட்டால், பொருளாதார வளர்ச்சி உயரும். சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு சட்ட அறிவுறுத்தலின்படி மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு நடைமுறைத்தப்படும்.

ஒருவேளை நிலம் கையகப்படுத்த முடியாத, மக்களுக்கு விருப்பமில்லாத சூழல் தொடர்ந்து நிலவினால், ஒருபோதும் அந்தத் திட்டத்தை நாங்கள் புகுத்தப் போவதில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் விரைவிலேயே நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.