சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களுக்கு சென்னை போலீஸ் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் 2க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
