சென்னை: திருத்தணியில் புத்தாண்டையொட்டி நடைபெறும் திருப்புகழ் திருப்படி பூஜை விழாவையொட்டி திருத்தணிக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அறுபடைவீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில், திருப்புகழ் திருப்படித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம், ஏராளமான பஜனை குழுவினர் ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலுக்குச் சென்று முருகப் பெருமான வழிபடுவார்கள். இக்கோயிலில் முக்கிய விழாவாக ஓா் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு […]
