டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 243 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் 25 மில்லியன் குடியிருப்பாளர்களில் பாதி பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது சீனா முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இது இந்தியா போன்ற பல்வேறு நாடுகளையும் பாதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 243 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3609 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,699 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,43,850ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,09,14,546 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 81,097 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.