முன்னாள் திமுக எம்பி இறப்பில் திருப்பம்… திட்டமிட்ட கொலையா? – 5 பேர் கைது

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார். இவர் திமுகவில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளராகவும் இருந்தார்.

சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி,  உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் , இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடுவாஞ்சேரி காவல்துறையினர் 4 பேரை கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்தான் தனது மகனுக்கு கடந்த 23ஆம் தேதி , திருமணம் வைத்திருந்த நிலையில் அவர் அதற்கு முந்தைய நாள் உயிரிழந்தது  பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நான்கு பேர் கைது செய்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது கூடுதல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.‌ முன்விரோதம் மற்றும் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்து உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தம்பியின் மருமகனிடம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததால், அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தற்பொழுது அவர் தம்பியின் மருமகன் இம்ரான் மற்றும் அவர்களது கூட்டாளிகளான நசீர், லோகேஷ், சுல்தான்,தவுபிக் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து இந்த கொலை சதி திட்டத்தை தீட்டியது என தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.