ரிஷப் பண்ட் காரில் இருந்து சாலையில் சிதறிய பணத்தை பொதுமக்கள் திருடி சென்றார்களா?


கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டின்  பணம் கீழே சிதறியதையடுத்து மக்கள் அதை திருடியதாக கூறப்பட்ட நிலையில் அதன் உண்மை தன்மை தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இன்று அதிகாலையில் கார் விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்துக்கு பின்னர் காரில் இருந்த அவர் பணம் சாலையில் சிதறியதையடுத்து அங்கிருந்த மக்கள் பணத்தை திருடி சென்றதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த பேருந்து ஓட்டுனர் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், பண்ட் கார் விபத்தை சந்தித்ததை நான் பார்த்த போது பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டு அவர் அருகே சென்றேன்.

ரிஷப் பண்ட் காரில் இருந்து சாலையில் சிதறிய பணத்தை பொதுமக்கள் திருடி சென்றார்களா? | Rishabh Pant Car Accident Money

opindia

சாலையில் சிதறிய பணம்

பிறகு அவரை ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்து, ஆம்புலன்சை அழைத்தேன்.
சாலையில் சிதறி கிடந்த பண்டுடைய பணம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.