சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்பட உள்ள பன்னீர் கரும்பு உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என கொள்முதல் குழுவினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கரும்பு கொள்முதல் தேவையான குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசு பொங்கலுக்கு இந்த ஆண்டு பச்சரிசி மற்றும் சர்க்கரை உடன் ரூ.1000 ரொக்கம் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தது, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]
